நாங்கள் யாரும், யாருக்கும் அடிமையல்ல: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிச்செட்டிப்பாளையம்: கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் யாருக்கும் யாருக்கும் அடிமை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக் கட்சியான கொமுக சார்பில் கோபியில் சிவராஜ் போட்டியிடுகிறார். அவரை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது,
என்னடா இவர் கடந்த சில மாதங்களாக திமுக மீது குற்றம்சுமத்திப் பேசிவிட்டு தற்போது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேச வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம்.
நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. கூட்டணிக்காக 100 சதவீதம் உழைப்பவன் காங்கிரஸ்காரன்.
இந்த கோபியில் கடந்த 29 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கோட்டையன் தொகுதிக்காக என்னவெல்லாம் செய்துள்ளார் என்று பட்டியல் போட முடியாது.
ஆனால் நான் 5 ஆண்டுகள் கோபி எம்.பி.யாக, மத்திய அமைச்சராக இருந்தபோது கொடிவேரி அணையை சுற்றுலா தலமாக்கியது உள்ளிட்ட பல பணிகளை செய்துள்ளேன்.
எம்.ஜி.ஆரிடம் நெருக்கமாக இருந்த முத்துசாமி, ஈரோட்டுக்கு பல நற்பணிகளை செய்துள்ளார். ஆனால் செங்கோட்டையன் கோபிக்கு எந்த பணிகளையும் செய்யவில்லை.
மாறாக கீரிப்பள்ளம் ஓடை மறுசீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற வேலைகளை செய்யவிடாமல் தடுத்தார் அவர். இந்நிலையில் அவர் மீண்டும் கோபியில் வெற்றி பெற்றால் உடனே போயஸ் கார்டனுக்கு சேவை செய்யச் சென்றுவிடுவார்.
கோபி முற்றிலும் பின்தங்கிய பகுதியாக மாறிவிடும். கோபியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் செங்கோட்டையன் மீண்டும் வெற்றிபெறக் கூடாது என்று கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications