தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வில் வைகோ பங்கேற்பு
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் ஆய்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்ளவிருக்கிறார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நீரி எனும் நிறுவனம் ஆய்வு நடத்துகிறது. இதில் வைகோ கலந்து கொள்கிறார் என்று மதிமுக தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி்த்துள்ளது.
அந்த அறிக்கையில் கூற்ப்பட்டுள்ளதாவது,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதால் அதை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் நீரைக் குடிக்கிற ஆடு, மாடுகள் மரணமடைவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து சூற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் குறித்து ஆய்வு நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு 'நீரி' என்னும் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த ஆய்வு குறித்து வைகோவுக்கு முன் தகவல் தந்து நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
எனவே வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் ஆய்வில் கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கு அந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. அதன்படி 'நீரி' நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும்போது வைகோவும் உடனிருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications