திமுக அமைச்சரின் சகோதரி வீட்டில் பற்ககும் படை சோதனை

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சகோதரி மங்கையர்கரசியின் வீட்டில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சகோதரி மங்கையர்கரசி (58). சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர். அவரது மகன் செந்தில் குமார். அவர் சிதம்பர நகர திமுக செயலாளராகவும், கீரப்பாளையம் ஒன்றிய குழுத் தலைவராகவும் இருக்கிறார்.

செந்தில் குமாரின் வீடு சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ள விபிஷ்ணபுரத்தில் உள்ளது. செந்தில் குமார் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 2 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், சிதம்பரம் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் செந்தில் குமாரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆனால் அங்கு ரூ. 15 ஆயிரத்திற்கும் குறைவான ரொக்கமே இருந்துள்ளது. வேறு எதுவும் கிடைக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+