அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் டிவிக்கள் அரசுடைமை: தா.பாண்டியன் வாக்குறுதி
Subscribe to Oneindia Tamil
சேலம்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் டிவிக்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அவர் பேசியதாவது,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளால் வெற்றி பெற முடியாது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் டி.வி.க்களை அரசுடைமையாக்கி ஜெயலலிதா முதல் கையெழுத்திடுவார். தமிழகம் முழுவதும் தென்னை, பனை விவசாயிகள் கள் இறக்க அனுமதி கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இது குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தி, கள் இறக்க அனுமதி அளிப்பதோடு டாஸ்மாக் மதுக்கடைகளிலேயே விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications