தமிழக பஸ் எரிப்பு வழக்கு-3 பேர் சொத்துகள் பறிமுதல்: என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: தமிழக பஸ் எரிப்பு வழக்கில் தலைமறைவாகவுள்ள கேரளாவைச் சேர்ந்த 3 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பஸ் ஒரு கும்பலால் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக மதானியின் மனைவி சூபியா உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 10 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணூரை சேர்ந்த சபீக், முகமது சாபீக், எர்ணாகுளத்தை சேர்ந்த அனூப் ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.
தேசிய புலனாய்வு அமைப்பு 3 பேரையும் தேடி வருகிறது. ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் அந்த 3 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்க கேரளாவில் புதிய சட்டம்:
இதற்கிடையே, கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கேரள சட்டசபை தேர்தல் வரும் 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும், இடதுசாரி அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இது தவிர பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஒரு அணியாக போட்டியிடுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி நேற்று வெளியிட்டார். கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம், கல்வி, வேலை வாய்ப்பில் முற்பட்ட வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications