சென்னையில் பெண் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை
சென்னை: சென்னையில் பெண் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி ரமணி (40). இவர் இன்று காலை தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டினர்.
கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ரமணி அந்த இடத்திலேயே பலியானார். ரமணியின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தங்கை வேல்விழி அங்கு வந்தார். அவரையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டது.
கொலை செய்யப்பட்ட ரமணி மீது பல்வேறு கஞ்சா வழக்குகள், கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்குகள் உள்ளன. பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரமணி மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக வட சென்னை பகுதியை கலக்கி வந்த இந்த பெண் தாதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு கஞ்சா வியாபாரியான முருகம்மாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்தது.
இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்வதும் வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முருகம்மாள் கோஷ்டி ரமணிக்கு குறி வைத்தது. ஆனால் அதில் ரமணி தப்பிவிட்டார். ரமணியின் தம்பி சக்திவேல் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முருகம்மாளும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் ரமணியையும் அதே கும்பல்தான் தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கூலிப்படையை ஏவி இக்கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications