நெல்லை அருகே பிரசார கார் பாய்ந்து 2 பெண்கள் பலி: போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே உள்ள அழகநேரியில் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் வேட்பாளரின் பிரசார கார் புகுந்ததில் 2 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
நெல்லை அருகே உள்ள அழகநேரியில் இன்று காலை 6 மணி அளவில் பெண்கள் தெருக் குழாயில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியனின் பிரசார கார் அப்பகுதியில் வேகமாக வந்தது. திடீரென கார் கட்டுபாட்டை இழந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் பெண்கள் அலறி அடித்து அங்கும், இங்கும் ஓடினர். இதில் 2 பெண்கள் காரில் சிக்கினர்.
தெருக்குழாயையொட்டி உள்ள பாளையங்கால்வாய்க்குள் 2 பெண்களை இழுத்து கொண்டு சென்ற கார் தலைகீழாக விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காரில் டிரைவரும், மற்றொரு வாலிபரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பொது மக்கள் காப்பாற்றினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாளையங்கால்வாய்க்குள் இறங்கி தேடினர். பலியான இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பலியானவர்கள் அழகநேரியைச் சேர்ந்த முத்தம்மாள், பாப்பாத்தியம்மாள் என தெரிய வந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. மேலும் அழகநேரி பகுதியை பதற்றமான பகுதியாக கருதப்படுவதால் இச்சம்பவம் தொடர்பாக மேலும் எதுவும் நடைபெறமாலிருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications