தாய், இரு மகள்களை மிரட்டி சீரழித்த டிராவல்ஸ் அதிபர் கைது
ஓசூர்: நண்பரின் மனைவியையும், அவரது இரு மகள்களையும் மிரட்டி மிரட்டி கற்பழித்து சித்திரவதை செய்து வந்த டிராவலஸ் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓசூர், ராயக்கோட்டை பகுதியில் நடந்துள்ள இந்த கொடுமைச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைதான நபருக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பரின் 16 வயது மகளைக் கூட விடாமல் மோசம் செய்து நாசப்படுத்தியுள்ளார் இந்த காமவெறி பிடித்த நபர்.
ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு 39-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற போஸ். 31 வயதான இந்த நபர் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் ராஜேஷ். இருவரும் நண்பர்கள். ராஜேஷ் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் அவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ரூ. 1 லட்சம் நிதி கிடைத்தது.
இந்த பணத்தை தன்னிடம் கொடுக்குமாறும், மாதத்திற்கு 3 சதவீத வட்டி தருவதாகவும் கூறியுள்ளார் போஸ். இதை நம்பி ராஜேஷின் மனைவி பணத்தை போஸிடம் கொடுத்தார். முதலில் சில மாதங்கள் ஒழுங்காக வட்டி கொடுத்து வந்தார் போஸ். ஆனால் பின்னர் அவரது புத்தி மாறியது.
அடிக்கடி ராஜேஷின் வீட்டுக்குச் சென்ற அவர், ராஜேஷின் மனைவியை மிரட்டி உறவுக்கு அழைத்தார். அவர் மறுத்துள்ளார். ஆனால் நீ மறுத்தால் உனது இரு மகள்களையும் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி பணிய வைத்துள்ளார். இவ்வாறு பலமுறை செய்துள்ளாராம்.
அத்துடன் நிற்காத அவர் கல்லூரியில் படித்து வரும் ராஜேஷின் மூத்த மகளையும் இதேபோல மிரட்டி கற்பழித்துள்ளார். இருவரையும் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்து வந்த போஸின் கண்ணில், ராஜேஷின் 16 வயது இளைய மகள் படவே, அவரையும் இதேபோல மிரட்டி பணிய வைத்து நாசப்படுத்தியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு ராஜேஷின் வீட்டுக்கு வந்துள்ளார் போஸ். அப்போது ராஜேஷின் மூத்த மகளும், அவருடன் படிக்கும் தோழியும் மட்டும் இருந்தனர். தோழியை அனுப்பி விட்டு வா, உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார் போஸ். இதைப் பார்த்து ராஜேஷின் மகள் பீதியடைந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அவரது தோழி உடனடியாக செல்போனில் தனது அண்ணனுக்குத் தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.
ஆனால் அது கூட சுய நினைவில் இல்லாத அளவுக்கு குடிபோதையில் இருந்த போஸ், ராஜேஷின் மகளை பலவந்தப்படுத்தி உறவு கொள்ள முயன்றார். அவரைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.
போஸ் மீது கற்பழித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போஸால் சீரழிக்கப்பட்ட ராஜேஷின் இளைய மகளைக் காணவில்லை என்று தெரிகிறது. அவர் எங்கு போனார் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications