பிரசாரத்திற்குப் போய் விட்ட 25 மத்திய அமைச்சர்கள்-கோப்புகள் குவிகின்றன
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக 25 மத்திய அமைச்சர்கள் போய் விட்டதால் பெருமளவிலான கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றனவாம். பல முக்கிய கோப்புகளைக் கூட பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
25 அமைச்சர்களில் 9 பேர் கேபினட் அமைச்சர்கள், ஒருவர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், மற்ற 15 பேரும் துணை அமைச்சர்கள் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அவரவர் கட்சிகளின் நட்சத்திர பிரசாகர்களாக பிரசாரம் செய்து வருகின்ரனர்.
இதன் காரணமாக பல முக்கிய கோப்புகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து திரினமூல் காங்கிரஸ் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான திணேஷ் திரிவேதி கூறுகையில், இப்போது நாட்டை நடத்திக் கொண்டிருப்பது அமைச்சர்கள் அல்ல, அதிகாரிகள்தான் என்றார்.
பிரசாரக் களத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர். இவர்கள் காங்கிரஸுக்காக மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும் அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டியிலும் இவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இந்த மூன்று பேருமே தற்போது பிரசாரக் களத்தில் இருப்பதால் இந்தக் கமிட்டிகளின் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரசாரத்திற்கு அமைச்சர்கள் போய் விட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை ரயில்வே மற்றும் ரசாயணத்துறை அமைச்சகம்தான் என்கிறார்கள். ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி நீண்ட காலமாகவே கொல்கத்தாவில்தான் இருந்து வருகிறார். மு.க.அழகிரி, தமிழகத்திலேயே இருந்து வருகிறார்.
தேர்தல் முடிந்த பிறகுதான் அமைச்சர்கள் டெல்லிக்குத் திரும்புவார்கள் என்பதால் அதுவரை அவர்கள் சார்ந்த அமைச்சகங்கள் சகஜ நிலைக்கு வர இன்னும் சில நாட்களாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications