கபில் சிபல் ராஜினாமா செய்யட்டும்! - அன்னா ஹஸாரே
டெல்லி: லோக்பால் மசோதா மீது நம்பிக்கை இல்லாவிட்டால் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காந்தியவாதியும் பிரபல சமூக சேவகருமான அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு புறப்படும் முன்னர், இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லோக்பால் மசோதாவால் எந்த பயனும் ஏற்படாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, "கபிலுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர் உடனடியாக கூட்டுக்குழுவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். கபில் சிபல் ஏன் தேவையில்லாமல் அவரது நேரத்தையும் எங்கள் நேரத்தையும் விரயமாக்க வேண்டும்.
நாட்டுக்காக அவர் வேறு ஏதேனும் சேவை செய்யலாம். லோக்பால் மசோதாவால் எந்த பயனும் ஏற்படாது என்று நம்பினால், நீங்கள் கூட்டுக்குழுவில் இருக்கக்கூடாது. ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலையை பாருங்கள்," என்று ஹசாரே பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications