205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்-சரத்குமார்
நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
ஓட்டுப் போடாத சரத்
சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.
இதேபோல ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோருக்கும் சென்னையில்தான் ஓட்டு உள்ளது. இவர்களும் தத்தமது தொகுதியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.
வரலாறு காணாத வெற்றி-செ.கு.தமிழரசன்
அதிமுக கூட்டணியில், இரட்டை இலைச் சின்னத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும்.ஜெயலலிதா முதல்வராவது
உறுதி என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications