For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடகிழக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி இல்லை

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: வடகிழக்கு ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இன்று அதிகாலை 5. 57 மணி அளவில் வடகிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

இதே வடகிழக்கு ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட 9.0 அளவு பூகம்பம் மற்றும் சுனாமியால் அப்பகுதியே சீர்குலைந்துள்ளது. இந்த இரட்டை பேரழிவுகளில் சிக்கி 13 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர், சுமார் 15 ஆயிரம் பேரைக் காணவில்லை.

இந்த பேரழிவுக்குப் பிறகு ஜப்பானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

English summary
6.1 magnitude earth quake hit northeast Japan at 5.57 am today. No tsunami warning has been issued. The country sees a number of strong aftershocks after the twin disaster on march 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X