சட்டசபை தேர்தல்: கேரளாவில் 74% வாக்குப்பதிவு
திருவனந்தபுரம்: நேற்று நடந்த கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
நேற்று தமிழகம், புதுவையைப் போன்று 140 தொகுதிகள் கொண்ட கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 971 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்திலேயே கண்ணூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.4 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் 80.2 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களில் 77 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. பத்தனம்திட்டா (68.2), திருவனந்தபுரம் (68.5%) ஆகிய மாவட்டங்களில் தான் மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது. அச்சுதானந்தன் போட்டியிடும் மலம்புழா உள்ள பாலக்காடு மாவட்த்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் போட்டாபோட்டியாக இருக்கிறது.
இடதுசாரி அணியின் தலைமைக் கட்சியான மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 93 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இடதுசாரிகளின் நட்சத்திர வேட்பாளரான முதல்வர் அச்சுதானந்தன் மூன்றாவது முறையாக மலம்புழாவில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரசைத் சேர்ந்த லதிகா சுபாஷ் போட்டியிடுகிறஆர். காங்கிர்ஸ 82 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 24 இடங்களில் போட்டியிடுகின்றது.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உம்மன் சாண்டி கோட்டயம் மாவட்டத்திலுள்ள புதுப்பள்ளியில் போட்டியிடுகிறார். இவர் இதே தொகுதியில் 9 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஹரிப்பாடு தொகுதியி்ல் போட்டியிடுகிறார். அவருக்கு முதல்வர் பதவியை வகிக்க விருப்பம் உள்ளது. அதனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் உம்மன் சாண்டிக்கும், ரமேஷ் சென்னிதலாவுக்கு இடையே போட்டியிருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications