தேமுதிக 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
திருக்கோவிலூர்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நல்ல முறையில் உள்ளது. நான் நான் சென்ற இடங்களில் பார்க்கும்போது வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனது உடல்நிலை சரியில்லாததால், மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனாலும் நான் தொகுதியை பார்க்க வந்துள்ளேன்.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கருணாநிதி கூறுகிறார். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அவர் நல்லாட்சி செய்திருந்தால் ஏன் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்க வேண்டும்?.

இந்த தேர்தலில் தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாகச் செய்தது. ஆனாலும் கடைசி 2 நாள்களில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுகவினர் நடத்திய பணப் பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. பணப் பட்டுவாடா நடந்திருந்தாலும், மக்கள் ஆதரவுடன் அதிமுக-தேமுதிக கூட்டணியின் வெற்றி உறுதி.

சினிமா துறைக்கு முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தால் பாதிப்பு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தப் பிரச்சனை தேர்தலில் திமுகவைப் பாதிக்கும் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+