'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம்

சமூக சேவகர் அன்னா ஹஸாரே டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது போராட்டத்தால் ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முன் வந்துள்ளது.
போராட்டத்துக்கு பிறகு கருத்து கூறிய அன்னா ஹஸாரே, 'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செயல் படுகிறார்கள்.
அவர்கள் திட்டங்கள் நன்றாக உள்ளன. எனவே மற்ற மாநில முதல்வர்களும் அவர்களது திட்டங்களை பின்பற்ற வேண்டும்,' என்று கூறி இருந்தார். நரேந்திர மோடியை பாராட்டிப் பேசியதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
குஜராத்தில் உள்ள அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கூட, அவர் மோடியை ஆதரிப்பதை ஏற்கவில்லை. இதையடுத்து விளக்கம் ஒன்றை வெளியிட்டார் ஹஸாரே.
அதில், "நான் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை மக்களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்களையும்தான் பாராட்டினேன். ஆனால் மதவாதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.
மேதா பட்கர்
பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் ஹஸாரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "நரேந்திர மோடியை அன்னா ஹஸாரே பாராட்டி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழலுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் மதவாதத்தை தூக்கிப் பிடிக்கும் மோடியைப் பாராட்டுவது தேவையற்றது. இது அரசியல் ஆகிவிடும்," என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். "நரேந்திர மோடியை பாராட்டும் யாரும் மதவாத எதிர்பாளர்களாக இருக்க முடியாது. ஹஸாரே அரசியல்வாதி போல செயல்படுகிறார்", என்றனர்.
இதே போல பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து அன்னா ஹஸாரே ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் எனது கருத்து குறித்து தெளிவாக விளக்கம் கூறி விட்டேன். அதன் பிறகு என்னை விமர்சிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தொடர்ந்து வரும் விமர்சனங்களை பார்க்கும் போது நம்மிடம் கருத்து வேறுபாடு, பிளவை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சீர் குலைக்க முயற்சி நடப்பதாக தோன்றுகிறது.
ஆனால் இதற்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நமது இயக்கத்தை முன் நடத்தி செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நமது சக்தியை ஒரு போதும் வீணடிக்க செய்து விடக்கூடாது. ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் இதுவரை சிறப்பான வெற்றியை பெற்று வந்துள்ளது. நமது ஒற்றுமை தொடர்ந்து நீடித்தால் ஊழலற்ற சமுதாயத்தை நிச்சயம் உருவாக்க முடியும்," என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications