மன்மோகன் சிங் ஓட்டுப் போடாதது வருத்தம் தருகிறது-நரேந்திர மோடி
அகமதாபாத்: அஸ்ஸாம் மாநில சட்டசபைத் தேர்தலில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டுப் போடாமல் இருந்தது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
இதுகுறித்து இன்று அகமதாபாத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பிரதமர் ஓட்டுப் போடாமல் தவிர்துதள்ளார். அவருக்கு திஸ்பூர் தொகுதியில் ஓட்டு இருந்தது. ஆனால் அவர் ஓட்டுப் போடவில்லை. இது நாட்டு மக்களின் உள்ளம் வருந்தும் செய்தியாகும்.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கிய அடிப்படை உரிமை ஓட்டு உரிமை. இதனை பிரதமர் மறந்தது ஏன்? ஜனநாயகத்தின் முக்கிய கடமையை நிறைவேற்ற தவறி விட்டார் அவர் இது பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். என்றார் மோடி.












Click it and Unblock the Notifications