ஆட்சி மாற்றத்திற்காகவே எழுச்சியுடன் வாக்களித்த மக்கள்: டி.ராஜா
சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் எழுச்சியுடன் வாக்களித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட வெங்கட் நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் டி. ராஜா வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழவதும் உள்ள மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுச்சியுடன் வாக்களித்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரப்போவது உறுதி என்றார்.
அதிமுக ஆட்சி உறுதி: தா.பா
சட்டசபை தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் அமைதியாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்து வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கப்போவது உறுதி என்றார்.
திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தல்: பொன். ராதாகிருஷ்ணன்
இந்த தேர்தல் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. எதிர்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவரும், நாகர்கோவில் வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications