வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை-புளியங்குடி ஆதிவாசிகள் வேதனை
புளியங்குடி: புளியங்குடி பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிச் சென்றனர்.
புளியங்குடி வனச்சரக்கத்திற்கு உட்பட்ட கோட்டமலை பீட் பகுதியில் சுமார் 22 ஆதிவாசி குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 47 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது. இவர்கள் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள ஏவிஎம் துவக்கப்பள்ளியில் வாக்களிப்பது வழக்கம். இவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாத நிலையில் நேற்று மலைப்பகுதியிலிருந்து 47 பேரும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க வந்தனர்.
ஆனால், வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால் வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இவர்களுக்கு ஓட்டு உள்ளது என்று இருந்தது.
பின்னர் இவர்கள் டிஎன் புதுக்குடி, சிந்தாமணி ஆகிய பகுதிகளுக்கு சென்று தங்களின் பெயர் உள்ளதா என பார்த்து வந்தனர். ஆனால் அவர்கள் பெயர் இல்லாததால் மனவேதனையுடன் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications