தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் விருது விழா தள்ளிவைப்பு
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விருது வழங்கும் விழா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ஏப்ரல் 14-ம் தேதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள். இந்த நன்னாளில் ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் விழா எடுப்பது வழக்கம்.
இந்த விழா விடுதலை சிறுத்தைகள் சார்பில் "சித்திரைத் திருவிழா" என்னும் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்மைக்காலமாக அதே நாளில், சமூகத் தொண்டு செய்யும் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறோம்.
மேலும் அம்பேத்கர்சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், காயிதேமில்லத்பிறை மற்றும் செம்மொழிஞாயிறு என்னும் விருதுகளும் தலா ரூ. 50 ஆயிரம் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இந்த விழா சட்டசபை தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது. விழா குறித்தும், விருது பெறுவோர் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications