சென்னையில் பட்டபகலில் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
சென்னை: திருவான்மியூரில் உள்ள ஒரு தொழில் அதிபர் வீட்டில் பட்டப்பகலில் 45 பவுன் நகையும், ரூ. 12 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியி்ல் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் (53). அவருக்க அதே பகுதியில் உள்ள அவ்வை நகரில் சொந்தமாக லேத் பட்டறை உள்ளது. அவர் வழக்கம் போல் காலையிலேயே பட்டறைக்கு கிளம்பிவிட்டார். அவரது மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு காய்கறி வாங்கச் சென்று விட்டார். காய்கறி வாங்கிவிட்டு வந்தபோது பூட்டிச் சென்ற கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகளும், ரூ. 12 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உடனே திருவான்மியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைக்குச் சென்றுவிட்டு திரும்புவதற்குள் நடந்த இந்த கொள்ளையால் அப்பகுதி பக்கள் பீதி அடைந்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications