மும்பை கடலில் ஏகே 47 துப்பாக்கிகள்-8 பேர் கைது
மும்பை: கைதான டென்மார்க் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல்படையினரைப் பார்த்தும் தாங்கள் வைத்திருந்த 2 ஏகே 47 ரக துப்பாக்கிகளை மும்பை கடலில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு வரும் கப்பலில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மும்பைக்கு வரும் அனைத்து கப்பல்களையும் சோதனை செய்தனர். அப்போது டென்மார்க் நாட்டில் இருந்து வந்த டேனிகா சன்ரைஸ் கப்பலை துரத்திப் பிடித்து சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கப்பலில் இருந்த 8 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் முன்னாள் இங்கிலாந்து இராணுவத்தினர் 2 பேரும் அடக்கம்.
விசாரணையில் அவர்கள் தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று உறுதியாயக் கூறினர். பின்னர் தாங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர்கள் உண்மையை தெரிவித்தனர். கப்பலில் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகளும், மேலும் 2 துப்பாக்கிகளும் வைத்திருந்ததாகவும் கடலோர காவல்படை துரத்தியபோது அதை கடலில் வீசிவிட்டதாகவும் கூறினார்கள்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த கப்பல் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் கேட்வே ஆப் இந்தியா அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அந்த கப்பலில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications