கோவை குழந்தைகள் கொலை வழக்கு-மே 23 முதல் விசாரணை
கோவை: கோவை பள்ளி குழந்தைகள் முஸ்கின், ரித்திக் படுகொலை வழக்கில் சாட்சி விசாரணை வரும் மே மாதம் 23ம் தேதி முதல் நடக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி கோவையில் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்தின் மகள் முஸ்கின் (11), மகன் ரித்திக் (8) ஆகியோர் கடத்தப்பட்டு கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டனர்.
பிரேதப் பரிசோதனையில் முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்கையில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கூட்டாளி மனோகரன் மீதான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மனோகரனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோகரன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் வரும் மே மாதம் 23-ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி ஜூன் 14-ம் தேதிக்குள் வழக்கை முடிக்க ஏதுவாக சாட்சிகளை தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 121 நபர்களை 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications