ஹெலிகாப்டர் விபத்தில் திருப்பத்தூர் லெப்டினன்ட் கர்னல் மனைவி, மகன் பரிதாப சாவு
வேலூர்: கடந்த 19-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த இராணுவ வீரரின் மனைவியும், மகனும் பலியாகினர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், புதுப்பேட்டை ரோடு, 6-வது தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். அருணாசல பிரதேசத்தில் உள்ள தவாங் நகரில் ராணுவ லெப்டினன்ட் கர்னலாகப் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி அனிதா (31). அவர்களது ஒரே மகன் ரிஷிகுமார் (5).
ரிஷிகுமார் கோவையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தான். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அனிதா மகன் ரிஷிகுமாரை அழைத்துக் கொண்டு கணவனைப் பார்க்க குவாஹாட்டி எக்பிரஸில் புறப்பட்டார்.
குவாஹாட்டியில் இறங்கிய அவர், செவ்வாய்க்கிழமை மாலை அங்குள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டரில் அருண்குமார் பணிபுரியும் இடத்துக்குப் புறப்பட்டார்.
தவாங் நகர் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க முயன்றபோது அது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இதில் அனிதாவும், ரிஷிகுமாரும் அடக்கம்.












Click it and Unblock the Notifications