சங்கர நாராயணசாமி கோயில் ராஜகோபுர சிற்பம் இடிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி
சங்கரன்கோவில்: சங்கர நாராயணசாமி கோயி்ல் ராஜகோபுரத்தில் உள்ள யாழி சிற்பம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கர நாராயணசாமி கோயில் உள்ளது. 11-ம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நேறறு 3-ம் ஆண்டு வருசாபிஷேகம் நடந்தது. இங்குள்ள 125 அடி உயர ராஜகோபுரத்தில் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ராஜகோபுரத்தின் 9-ம் நிலைக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த யாழி சிற்பம் திடீரென இடிந்து விழுந்தது. கீழே உள்ள முகப்பு மண்டபத்தில் உடைந்த சிற்பத்தின் பாகங்கள் கிடந்தன. இதனால் யாருக்கு்ம் காயம் ஏற்படவில்லை.
யாழி சிற்பம் இடிந்து விழுந்ததால் கோயிலுக்கோ அல்லது மக்களுக்கோ அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications