3 நர்சுகளுக்கு செக்ஸ் தொந்தரவு-ஆயுர்வேத மருத்துவர் கைது
கன்னியாகுமரி: 3 நர்ஸ்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்த ஆயுர்வேத மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செல்வராஜ் (58). பரம்பரை வைத்தியரான இவர் மேலப்பாளையம் அருகே நத்தத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனையில் குமாரி (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நர்சாக வேலைக்கு சேர்ந்தார். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் டாக்டர் செல்வராஜ், இந்த நர்ஸை தனது அறைக்குள் அழைத்து தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அந்த நர்ஸ் மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் டாக்டர் செல்வராஜ், நர்ஸ் குமாரி, இன்னொரு நர்சான ஜெனீபர் (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் டாக்டர் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், விசாரணையில் செல்வராஜ் ஆயுர்வேத டாக்டராக பயிற்சி எடுத்துக் கொண்டாரே தவிர தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. ஆனாலும் இவர் கன்னியாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார். இதை அவரது இரண்டு மனைவிகள் நிர்வகித்து வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த ஆண்டு இவர் களியக்காவிளையில் ஒரு நர்சை திருமணம் செய்துள்ளார். மேலப்பாளையத்தில் மருத்துவமனை தொடங்கிய பிறகு அங்கு பணி செய்த நர்சுகள் குமாரி, ஜெனீபர் தவிர சாந்தி (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூன்று பேரையும் அவ்வப்போது நள்ளிரவில் தனது அறைக்கு வரவழைத்து செல்வராஜ் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications