டிஎன்பிஎஸ்சி 'குரூப் 2' தேர்வுகள் திடீர் தள்ளிவைப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் வரும் ஜூன் 19ம் தேதி நடத்த இருந்த குரூப்-2 தேர்வுகள், ஜூலை 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, கடந்த டிசம்பர் மாதம் குரூப் 2 தேர்வை அறிவித்தது. இதில் உதவி வணிக வரி அலுவலர், சப் ரிஜிஸ்ட்ரார்-கிரேட் 2, உதவி தொழிலாளர் நல ஆய்வாளர், நகராட்சி கமிஷனர்-கிரேட் 2, பைனான்ஸ் அசிஸ்டென்ட் ஆபீசர், டிஎன்பிஎஸ்சி அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர், ஜுனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபீசர், கோ-ஆப்ரெட்டிவ் சொஸைட்டி சீனியர் இன்ஸ்பெக்டர், ஜூனியர் கோ-ஆப்ரெட்டிவ் ஆடிட்டர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட 37 பதவிகள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 4,384 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கிடையே இந்தத் தேர்வு நடைபெறும் அதே நாளில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமன எஸ்.எஸ்.சி, கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (ஸ்லெட்) அறிவித்தது.
எனவே குரூப்-2 தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்று குரூப்-2 தேர்வை தள்ளி வைத்துள்ளது.
இந்தத் தேர்வுகள் ஜூன் 19ம் தேதிக்குப் பதிலாக ஜூலை 3ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications