ஜம்மு-காஷ்மீர், இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: 5.0 ரிக்டர் அளவிலான மிதமான பூகம்பம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இன்று தாக்கியது. இதன் மையம் பாகிஸ்தானில் இருந்தது.
இன்று காலை ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் மையப் பகுதி பாகிஸ்தானில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பூகம்பத்தை உணர்ந்த மக்கள் பீதியடைந்தனர்.
கடந்த 2 மாதங்களாகவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது சிறிய அளவிலான பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 12 முறை பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் சிக்கி 40,000 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.9 ரிக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்:
இந் நிலையில் இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications
