ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணம் கருணாநிதிதான்! - விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியே முழு முதல்காரணம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலி இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. இதைக் கண்டித்து உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

இலங்கை தமிழர் பிரச்னையில் 1991-ல் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது 3-வது முறையாக, தான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் கருணாநிதி.

இதற்கிடையில் காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை. சிதம்பரம், கருணாநிதியிடம் சொன்ன சிதம்பர ரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா?

அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, கருணாநிதியையும்தான். தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதியே முழு முதல்காரணம் என்று வரலாறு தூற்றும்.

அப்பாவித் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது இலங்கை அரசு.

இதை அறிந்த இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள், பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல், இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றது. இதையும் மீறி அந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை திங்கள்கிழமை (ஏப்ரல் 25) வெளியிட உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்கின," என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+