கொலை மிரட்டல் எதிரொலி-சாய்பாபாவின் உதவியாளர் சத்யஜித்துக்கு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

புட்டபர்த்தி: சத்யசாய்பாபாவால் சிறு வயது முதல் வளர்க்கப்பட்டு வந்த அவரது தனி உதவியாளர் சத்யஜித் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குவிவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சத்ய சாய்பாபா மரணமடைந்து விட்டார். இதையடுத்து அவரது அறக்கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் கடும் மோதல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சாய்பாபாவின் மிக நெருக்கமான, மிக முக்கிய உதவியாளரான சத்யஜித்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

5 வயது முதல் பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபாவின் நேரடி மேற்பார்வையில் வளர்ந்து வந்தவர் சத்யிஜத். 35 வயதாகும் அவர் பாபாவின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர். சத்யஜித் அனுமதியில்லாமல் யாரும் பிரசாந்தி நிலையத்தில் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், சத்யஜித்தை கொல்லை முயற்சிகள் நடப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சத்யஜித்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

சத்யஜித் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சரியாக உணவு தராமல் விட்டு விட்டார் சத்யஜித் என்பது ஒரு குற்றச்சாட்டாகும். இதனால்தான் பாபாவின் உடல் நிலை மோசமானதாகவும் சர்ச்சை நிலவுகிறது. இருப்பினும் இதுகுறித்து சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக டாக்டர்கள் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபா உடல் நலம் குன்றியிருந்த நிலையில் அவருக்கு சரியான முறையில் உணவுகள் தராமலும், அதிக அளவில் மயக்க மருந்துகளை செலுத்தியதாகவும், இதனால்தான் பாபாவின் உடல் நலம் மோசமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சத்யஜித்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு கூறுகிறது.

சாய்பாபாவைத் தவிர சத்ய சாய் அறக்கட்டளை செயலாளர் கே.சக்கரவர்த்தி மற்றும் சத்யஜித் ஆகியோருக்குத்தான் செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த இருவரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

இதனால் மற்ற நிர்வாகிகளுக்கு இவர்கள் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. தற்போது பாபா உயிரிழந்து விட்டதால், இந்த இருவர் மீதும், குறிப்பாக சத்யஜித் மீது பலரின் அதிருப்தி திரும்பியுள்ளதாகவும், அவர்களில்யாரேனும், சத்யஜித்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.

பாபா மரணமடைந்த பின்னர் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை சத்யஜித் உடலுக்கு அருகே இருந்தார். பின்னர் அவர் தனது அறைக்குப் போய் விட்டார். தற்போது அறைக்குள்ளேயேதான் அவர் அடைந்து கிடக்கிறார்.

இறுதிச் சடங்குகள் முடியும் வரை அவர் வெளியில் வர மாட்டார் என்று தெரிகிறது.

டாக்டருக்கும் பாதுகாப்பு:

இதேபோல சாய்பாபாவின் தனிப்பட்ட மருத்துவரான டாக்டர் ஐயர் என்பவருக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. பாபா மரணமடைந்த தருவாயில் அவருடன் அருகில் இருந்தவர்களில் ஐயரும் ஒருவர்.

பாபாவின் உடல் நலனை சரிவர ஐயர் கையாளவில்லை என்று பக்தர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் ஐயருக்கு தொலைபேசி மூலம் சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+