ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்பட 4 பேர் மீது கருணாநிதி வழக்கு
சென்னை: தி்முக அரசு மீது அவதூறான புகார்களைக் கூறியதாக கூறி அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட நான்கு பேர் மீது முதல்வர் கருணாநிதி சார்பி்ல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி அடுத்தடுத்து அவதூறு வழக்குகளைத் தொடர ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் பழ.நெடுமாறன் மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் இருவரும் ஆஜராகுமாறு கூறி சென்னை செஷன்ஸ் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவினர் நான்கு பேர் மீது கருணாநிதி அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மீது முதல்வர் சார்பில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கலாகியுள்ளது.
அதில் தலைமைச் செயலக இடமாற்றத்தின்போது கோப்புகளை அழிக்க முயற்சிப்பதாக திமுக அரசு அபாண்டமான புகாரை மேற்கண்டோர் கூறியுள்ளனர்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசை காபந்து அரசு என்றும் கூறியுள்ளனர். இது அரசுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று முதல்வர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications