அரசுப் பேருந்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த போலீசுக்கு செருப்படி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த போலீஸ் அதிகாரிக்கு செருப்படி விழுந்தது.
கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்றது. அதில் மூன்று கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து சென்றனர்.அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
பேருந்து சென்று கொண்டிருக்கையில் அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அந்த இருக்கையை விட்டு எழுந்து முன் பகுதிக்குச் சென்றனர். ஆனாலும், அந்த மாணவிகளை விடாமல் துரத்திய அந்த நபர் அங்கும் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய மூன்று மாணவிகளும் அந்த நபரை சுற்றி வளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்தனர்.
மாணவிகளிடம் நடந்த விவரத்தைக் கேட்டறிந்த பொதுமக்கள் தங்கள் பங்கிற்கு அவர்களும் அந்த நபரை நையப்புடைத்தனர்.
வலி தாங்க முடியாத அந்த நபர் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டே தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தார்.
அங்கிருந்த போலீசார் மாணவிகளை மிரட்டி புகார் கொடுக்கவிடாமல் துரத்தியடித்தனர். இதனால் இந்த பிரச்சனையை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications