2ஜி வழக்கு: சு.சாமியின் கோரிக்கை சட்டப்படி ஏற்புடையதல்ல-சிபிஐ

சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது சாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் சிபிஐக்கு சட்டரீதியாக உதவ தயாராக இருப்பதாகவும், இதனால் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதில் சிபிஐக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நம்புகிறேன்.
மேலும் என்னை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இது சாத்தியம் தான். இந்த விவகாரத்தில் நானும் விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் உதவ வேண்டு்ம் என்று உத்தரவிட
வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று சாமியின் மனுவுக்கு சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,
அரசு வழக்கறிஞராக தன்னை நியமிக்க வேண்டும் என்ற சாமியின் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டதல்ல. அவரது தனிப்பட்ட புகாரை தனியாக விசாரிக்கலாம். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித்தை சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றம் ஏற்கனவே நியமனம் செய்துள்ளது.
சிபிஐயின் வழக்குடன் சுவாமியின் மனுவை இணைக்கக் கூடாது. அவரது புகாரை சட்டத்துக்குட்பட்டு தனியாகக் கையாளலாம் என்று கூறியுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் வாதாட தனக்கு அவகாசம் வேண்டும் என சாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதிக்கு இதன் மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications