பின்லேடன் மறைவைக் கொண்டாடும் நிகழ்ச்சி-ஒபாமா அழைப்பை ஏற்க மறுத்த புஷ்
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில், கிரவுண்ட் ஜீரோ எனப்படும் நியூயார்க் இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருமாறு அதிபர் ஒபாமா விடுத்த அழைப்பை ஏற்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மறுத்துவிட்டார்.
தன்னை அழைத்ததை அவர் பெரிதும் வரவேற்றார். ஆனால் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒதுங்கியே இருக்க விரும்புகிறார். அவர் தீவிரவாதத்திற்கு எதிரான இந்த வெற்றியை அமெரிக்கர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார் என்று புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஷெர்சர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா நியூயார்க்கில் உள்ள கிரவுண்ட் ஜீரோவில் பேசவிருக்கிறார். அப்போது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அல் கொய்தா நடத்திய தாக்குதல்களில் இறந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஒபாமா அழைப்பு விடுத்ததை ஏற்க புஷ் மறுத்துவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒபாமா புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின் லேடன் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார். இதையடுத்து ஒபாமா, அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத் துறையை பாராட்டி புஷ் அறிக்கை வெளியிட்டார்.
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தவுடனே புஷ் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் ஒசாமாவைத் தேடும் பணியை முடுக்கி விட்டார். ஆனால் அவர் பதவிக்காலத்தில் பின் லேடனைப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் பின்னால் வந்த ஒபாமா அதை செய்து விட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications