ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீதான புகார்களைக் கைவிட்டது தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறாகப் பேசியதாக கூறி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மீது திமுகவும், மு.க.ஸ்டாலின் மீது அதிமுகவும் புகார் கொடுத்தன.
இதையடுத்து மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம். அவர்களும் விரிவான பதிலை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது இவர்களது விளக்கத்தை ஏற்றுக் கொண்டு இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளது.
இதுதொடர்பான முடிவை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் ஆணையர்கள் வி.எஸ்.சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர் அடங்கிய ஆணையம் எடுத்துள்ளது.
மூன்று தலைவர்களும் முன்னதாக கொடுத்திருந்த விளக்கத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பதிலையே தெரிவித்திருந்தனர். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசவில்லை என்றும், சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் தலைவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்துப் பேசியிருந்ததாக அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications