ஒசாமாவுக்கு எதிரான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 'பெல்ஜியன் ஷெப்பர்டு' நாய்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோடாபாத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி அருகே வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடனை, அமெரிக்கக் கடற்படையின் அதிரடிப்படையினர் கடந்த ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றனர்.
79 பேர் கொண்ட இந்தப் படையினர் 4 ஹெலிகாப்டர்களி்ல் அங்கு சென்றபோது ராணுவ பயிற்சி பெற்ற Belgian Malinois ரக நாயையும் உடன் கொண்டு சென்றுள்ளனர்.
பின்லேடன் அருகே இருந்த மலைப் பகுதிக்குள் தப்பியோடினால் அவர் மீது தாக்குதல் நடத்த இந்த நாய் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனிதர்களை விட பல மடங்கு வேகமாக ஓடக்கூடியவை இந்த வகை நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீட்டில் வெடிகுண்டுகள் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கவும் இந்த நாய் பயன்பட்டிருக்கும்.
ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் சீல்அதிரடிப்படையினர் இறங்கிய போது, அவர்களுடன் இந்த நாயும் இறக்கப்பட்டது.
இந் நிலையில் ஒசாமைவை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரை அதிபர் ஒபாமா நேற்று வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து விருது வழங்கியுள்ளார். ஆனால், அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அதே போல இந்த நாயின் விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்த நாய் பெல்ஜியன் மாலினோய்ஸ் அல்லது ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக சீல் படையினரின் செயல்பாடுகளை அமெரிக்கா வெளியுலகுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நம் ஊரில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. அதை வழங்குவதற்காக பல கோடி செலவில், நடிகைகளின் நாட்டிய நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐ தலைவர் திடீர் அமெரிக்கா பயணம்:
இந் நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அஹமத் சுஜா பாஷா திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் வந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற விவகாரத்தில் பாஷா பதவி விலகுவார் என்று கூறப்படும் நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications