ஜூன் 22 முதல் துணைத் தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூவில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 22ம் தேதி தொடங்கி, ஜூலை 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில்,
பிளஸ்டூவில் தோல்வி அடைந்தவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி இந்தத் தேர்வுகள் தொடங்கி, ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும்.
இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 13ம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் போலவே, தோல்வி அடைந்தவர்களும் இந்த கல்வியாண்டிலேயே தங்களது மேல் படிப்பைத் தொடருவதற்கு வசதியாக இந்த சிறப்புத் துணைத் தேர்வை தேர்வுகள் துறை நடத்துகிறது.












Click it and Unblock the Notifications