புழல் சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய அத்தனை பேரும் பாஸ்
சென்னை: புழல் மத்திய சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 23 கைதிகளும் பாஸ் செய்துள்ளனர். அதிலும் சத்யன் என்ற ஆயுள் தண்டனைக் கைதி 901 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 4 பெண்களும், 19 ஆண்களும் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தலா வேலூர், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். திருச்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேர். இவர்கள் அனைவரும் ஆண்கள். இவர்கள் போக 4 பெண் கைதிகளும் தேர்வு எழுதியிருந்தனர். சிறை வளாகத்திலேயே இவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இவர்கள் அனைவருமே தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இந்தக் கைதிகளுக்கு பாடம் நடத்துவதற்காக சிறை அதிகாரிகள் சண்முக சுந்தரம், ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்து பாடம் சொல்லித் தரப்பட்டது. அதை கவனமாக படித்து இந்தக் கைதிகள் தற்போது பாஸ் செய்து சிறை அதிகாரிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர். மேலும் இந்தக் கைதிகளுக்குப் பாடம் நடத்தியவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளே. இவர்கள் போக வெளியிலிருந்தும் தமிழ் பாடத்திற்காக ஒரு ஆசிரியரை வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுத்துள்ளனர்.
கைதிகளிலேயே அதிக மதிப்பெண் பெற்றவர் சத்யன் என்பவர். இவர் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி. இவர் 1200க்கு 901 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் மேல் படிப்பு படிக்க விரும்புகிறார். இவருக்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications