பின்லேடன் மனைவியரை விசாரிக்க அமெரிக்காவுக்கு பாக். அனுமதி
டெல்லி: ஒசாமா பின்லேனின் மனைவியரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது.
பின்லேடன் தங்கியிருந்த பாகிஸ்தான் வீட்டை, அமெரிக்கப் படையினர் வேட்டையாடியபோது அங்கு அவரின் 3 மனைவியரும் இருந்தனர். அவர்களை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைத்து விட்டு பின்லேடன் அமெரிக்க வீரர்கள் பறந்து விட்டனர்.
அதன் பின்னர் பின்லேடன் மனைவியரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தது அமெரிக்கா. ஆனால் இதுதொடர்பாக இழுத்தடித்து வந்த பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவின் மிரட்டல் கலந்த நெருக்குதலைத் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் எப்போது, எங்கு வைத்து விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை. மூன்று மனைவியர் தவிர 9 குழந்தைகளும் பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் இருந்தனர். அவர்களையும் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டனர்.
முன்னதாக விசாரணை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், பின்லேடனின் மனைவியரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாகவும், பாகிஸ்தானியப் படையினர் பின்லேன் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ள சில பொருட்கள் குறித்து விசாரிக்கவும் நாங்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறியிருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications