கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: கள்ளக் காதல் விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் திமுக மாநகராட்சி கவுன்சிலர் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மகபூப்பாளையம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர். மதுரை ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் மயிலைகிரிநாதன் (47). வங்கி ஒன்றில் செக்யூரிட்டியாக இருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் மீனாட்சி என்ற பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மயிலைகிரிநாதன் மீனாட்சி வீட்டில் இருந்தபோது, திமுக பிரமுகர் சண்முகம் மற்றும் 2 பேர் அங்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மயிலைகிரிநாதனை கற்கள் மூலம் தாக்கி கொலை மிரட்டல் விடுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மயிலைகிரிநாதன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திமுக பிரமுகர் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+