கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத இன்டர்நெட் மையங்களின் உரிமம் ரத்து: மதுரை கமிஷனர்
மதுரை: மதுரையில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத இன்டர்நெட் மையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மதுரை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் சி.டி. கடைகளில் ஆபாச படம் மற்றும் புதுப்பட சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 ஆயிரம் சிடிகள் பறிமுதல் செய்யப்பட்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும செல்போன் கடைகளில் புதுசெல்போன் வாங்கினால் ஆபாச படங்கள் இலவசமாக பதிவு செய்து கொடுப்பது தெரிய வந்தது. இது சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் மாணவர்கள் ஆபாச படங்கள் பார்த்து வருவதாகவும், மேலும் செல்போன்களில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
செல்லூரில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கிருந்த 9 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும், மையத்திற்கு வருபவர்கள் குறித்து முறையான பதிவேடும், அவர்களின் முழு முகவரியையும் சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத இன்டர்நெட் மையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications