பி.இ., எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: திருச்சி, மதுரை, கோவையிலும் நடத்த வைகோ கோரிக்கை
மதுரை: தமிழக அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடப்பதுபோன்று சென்னையில் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவையிலும் நடத்த வேண்டும் என்று மதிமுக செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள அனைத்து மாணவ-மாணவியருக்கும் மதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அதையே நினைத்து கவலைப்பட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். அவ்வாறு செய்து பெற்றோருக்கும், பொன்னாட்டிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் சென்னைக்கு வருகின்றனர். இதனால் கால விரயம், பண விரயம், வீண் அலைச்சல் ஏற்படுகின்றது.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில் சென்னையில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றில்லை.
மாணவர்களும், பெற்றோர்களும் படும் அவஸ்தைகளைத் தவிர்க்க தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை தவிர்தது திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications