வாக்கு எண்ணிக்கைப் பாதுகாப்புப் பணிக்காக சிஆர்பிஎப் வீரர்கள் வருகை
சென்னை: தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்புப் படையினரை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதன்படி நேற்று தமிழகத்தின் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களின் 5 கம்பெனி படையினர் நேற்று திருச்சி வந்தனர்.
தனி விமானங்கள் மூலம் இவர்கள் நேற்று மாலை வந்து சேர்ந்தனர். இவர்கள் குரூப் குரூப்பாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications