ஜெயலலிதா மீதான கிப்ட் செக் வழக்கு ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: தனது பிறந்த நாளுக்கு வந்த காசோலைகளை அரசுக் கணக்கில் சேர்க்காமல் தனது கணக்கில் போட்டுக் கொண்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது அவரது பிறந்த நாளுக்கு கிப்ட் காசோலைகள் ரூ. 2 கோடி அளவுக்கு வந்தது. முதல்வர் பதவியில் ஜெயலலிதா இருந்ததால் அதை அரசுக் கணக்கில்தான் அவர் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அதை தனது கணக்கிலேயே போட்டுக் கொண்டார்.
இதையடுத்து சிபிஐ கோர்ட்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா தவிர செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் அது ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications