மதுரை மேற்குத் தொகுதியில் மறு வாக்குப் பதிவு கிடையாது-தேர்தல் ஆணையம்

இதன் மூலம் மதுரை மேற்குத் தொகுதிக்கு மறு வாக்குப் பதிவு கிடையாது என்பதை தேர்தல் ஆணையம் விளக்கி விட்டது.
மதுரை மேற்குத் தொகுதியில் அதிகாரிகள் நடத்திய வேட்டையின்போது ஒரு நபரிடமிருந்து டைரி ஒன்று சிக்கியது. அதில் எந்தெந்தப் பகுதியில் யார் யாருக்குப் பணம் தரப்பட்டது என்ற பட்டியல் இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்திடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியிருந்தது. அவரும் அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, மற்ற இரு ஆணையர்களுடன் சந்தித்தார். அப்போது மதுரை மேற்குத் தொகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையர் சம்பத் கூறுகையில்,
"மதுரை மேற்கு தொகுதி தேர்தல் குறித்து மாநில தேர்தல் கமிஷனர் விளக்கம் கேட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த பிரச்சினை முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது என்றார்.
தமிழக தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையில், தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு மட்டும் ரூ. 60 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications