விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நேற்று காலை மத்திய தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜி மேற்பார்வையில், கலெக்டர் பழனிசாமி, டி.ஆர். ஓ. வெங்கடாசலம், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியா தலைமையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது, தி.மு.கவைச் சேர்ந்த பொன்முடி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் அங்கு இருந்தனர்.
முதல் சுற்றில் சண்முகம் 4787 வாக்குகளும், பொன்முடி 4720 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து 8 ரவுண்டுகள் வரை பொன்முடி பின் தங்கிய நிலையில் இருந்தார்.
ஆனால், 9 வது ரவுண்டில் மட்டும் 495 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலைக்கு வந்தார் பொன்முடி.
இந்த நிலையில், மாலை 4. 45 மணி அளிவில் 16 வது சுற்று அறிவித்த போது, அமைச்சர் பொன்முடி தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். அப்போது சிலர் பொன்முடியின் காரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற டி.ஸ்.பி. மாதவன் தலைமையிலான போலீசார் கல்வீசி தாக்கியவர்களை விரட்டியடித்தனர். இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications