சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அமைதிப் புரட்சி: பழ. நெடுமாறன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வகையில் அமைதிப் புரட்சி நடந்துள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்கள் நடத்தியுள்ள இந்த அமைதிப் புரட்சியை நான் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் பலர் படுதோல்வி அடைந்துள்ளனர்.
ஈழத் தமிழருக்கு திமுக-காங். செய்த துரோகம், தமிழக மீனவர்களை காக்கத் தவறியது, இந்தியாவின் மெகா ஊழலான 2ஜி ஊழல், ஆட்டிப் படைத்த குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கெல்லாம் மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.
பண பலம், அதிகார பலம் மற்றும் வாரி இறைத்த இலவசங்களைக் கண்டு மக்கள் மயங்கிவிடவில்லை. மாறாக திமுக கூட்டணியின் முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.
திருமங்கலம் சூத்திரத்தை மறுபடியும் செயல்படுத்தவிடாமல் தடுத்து தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது.
மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமே ஒன்றாக இணைந்து திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று பாராட்டுகிறேன்.
புதிய அரசு அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைக் கீழ்கண்ட நடவடிக்கைகளை தலையாய கடமையாகக் கருதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஐ.நா. குழுவால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த, இலங்கையில் மீதமுள்ள தமிழர்களை பாதுகாக்க ஐ.நா. படையை அங்கு அனுப்பி வைக்க, தமிழக மீனவர்களை காக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications