பாதுகாப்பு வளையத்திற்குள் போயஸ் கார்டன்: வாகனங்கள் சோதனைக்குப் பின் அனுமதி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்பதையடுத்து அவரது வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்கிறார்.
அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய முதல்வர் ஜெயலலிதாவின் வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளயைத்திற்குள் வந்துள்ளது.
கதீட்ரல் சாலையில் இருந்து போயஸ் கார்டனுக்கு செல்லும், பின்னி சாலைக்கு திரும்பும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்தும் வாகன்ஙகளும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது.
இது தவிர பின்னி சாலையில், ஒவ்வொரு சாலை சந்திப்பு பகுதியிலும் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும், சிகப்பு குமிழ்களும் வைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் உயர் அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது வந்து போயஸ் கார்டனை கண்காணிக்கின்றனர். நேற்று பின்னி சாலையில் வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணங்கள் பூசப்படும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications