2ஜி-வோல்டாஸ் நிலம்: ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர்களிடமும் சிபிஐ விசாரணை!

இந்த ஊழல் பணம் எப்படியெல்லாம் கை மாறியது என்பது குறித்து சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இதுவரை நடந்துள்ள விசாரணையில் ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதும், பிறகு மீண்டும் இந்தியாவுக்கு வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் டாடா டெலி சர்வீஸஸ் உரிமையாளரான டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான வோல்டாஸ் நிறுவனத்தின் சென்னை நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் மலேசியா சரவணன் வசம் சென்றுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் ராசாத்தி அம்மாளுக்குத் தந்திருக்கலாம் என சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.
பின்னர் இந்த நிலம் மலேசியாவைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியது. இந்த மாற்றத்தை ராஜாத்தி அம்மாளின் மற்றொரு ஆடிட்டரான ரத்தினம் செய்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் இருவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதி அளிக்கப்பட உள்ளது. அப்போது வோல்டாஸ் நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங்களை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழலாம் என்று தெரிகிறது.
நேற்று கனிமொழியின் ஆடிட்டர் ரத்னம் மற்றும் ராசாவின் ஆடிட்டர் கணபதியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணம் கைமாறிய விவகாரத்தில் கனிமொழி மற்றும் அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியுமான ராஜாத்தி அம்மாளுக்கு ஆடிட்டராக இருந்தவர் இந்த ரத்னம்தான்.
ஆடிட்டர் கணபதியிடம் ராசாவின் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல விவரங்களை சிபிஐ கேட்டதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications