For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மந்திரி சபையில் ரமேஷ் சென்னிதலா இடம் பெற வேண்டும்: உம்மன் சாண்டி விருப்பம்

By Siva
Google Oneindia Tamil News

Kerala CM Oommen Chandy
திருவனந்தபுரம்: கேரள அமைச்சரவையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா இடம் பெற வேண்டும் என்று முதல்வராகவிருக்கும் உம்மன் சாண்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதும் முதல் மந்திரி பதவிக்கு உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா இடையே போட்டி நிலவியது. ரமேஷ் சென்னிதலா திடீரென போட்டியில் இருந்து விலகினார். மேலும் அமைச்சரவையில் இடம் பெறாமல் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிப்பது என முடிவு செய்தார்.

இதை தொடர்ந்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உம்மன் சாண்டி முதல் மந்திரியாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைக்கப்போகும் மந்திரி சபையில் ரமேஷ் சென்னிதலாவும் இடம் பெற வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் கோஷ்டி பூசலை தவிர்க்க ரமேஷ் சென்னிதலா மந்திரி சபையில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என உம்மன்சாண்டி கருதுகிறார். எனவே, சென்னிதலா மந்திரி சபையில் இடம் பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் அவர் இதை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

இதனால் மந்திரி சபையில் ரமேஷ் சென்னிதலாவுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

English summary
Kerala CM to be Oommen Chandy expresses his desire to have the state congress president Ramesh Chennithala in his cabinet. It seems that he will insist the party high command about this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X