மமதா பதவேற்பு விழாவை சோனியா புறக்கணிப்பு: ப.சிதம்பரம் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மமதா பானர்ஜி முதல்வராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மமதா பானர்ஜி நாளை மேற்கு வங்க முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆனால் சோனியா பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்த‌தேவ் பட்டாச்சார்யாவிற்கு மமதா அழைப்பு விடுத்தார். அதற்கு இடது சாரிகள் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 34 ஆண்டுகளாக நடந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சி்க்கு மமதா முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இதற்கிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. அதில் கட்சியின் சட்டசபை தலைவராக மமதா, துணை தலைவராக பார்த்தா சாட்டர்ஜி, தலைமை கொறடாவாக சுபந்தேவ் சட்டோபத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மமதா பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+